ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நிரபராதியாக விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போது, அவர் உயர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், 250 பேரைக் கொன்றது மற்றும் சுமார் 500 பேரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல் தொடர்பாக போதுமான புலனாய்வுத் தகவல்களை முன்பே பெற்றிருந்தும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம், அதனை அலட்சியம் செய்தமைக்கான அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிராகரிக்குமாறு கோரி, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று காலை நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.