இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை மிக உயர்ந்த இராஜதந்திர மட்டத்தில் மீட்டெடுக்க துருக்கியும் மற்றும் எகிப்தும் தூதுவர்களை நியமித்துள்ளன.
செவ்வாயன்று துருக்கிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கூட்டறிக்கையில், கெய்ரோவுக்கான தூதராக சாலிஹ் முட்லு சென் ஐ நியமித்ததாக அறிவித்துள்ளது.
மேலும் எகிப்து அம்ர் எல்ஹமாமியை அங்காராவுக்கான தூதராக நியமித்ததாகவும் கெய்ரோவும் அங்காராவும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு ஜனாதிபதிகளும் எடுத்த முடிவின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.