உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் போது எதிர்க் கட்சியும் சில குழுக்களும் நடந்துகொண்ட விதம் கவலையளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்புகள் குறித்து எதிர்கருத்துகளை வெளியிடுபவர்கள் அதற்கான தீர்வுகளையும் முன் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு மாற்று வழிகளையோ தீர்வுகளையோ முன் வைக்காதவர்கள் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.