அழகு நிலையங்களை நடத்துவதற்குத் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலைகாரணமாக ஆண்கள் மாத்திரமன்றி பெண்களும் அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அழுகு நிலையங்கள் நடத்துவதற்கும் தலிபான்கள் தடைவிதித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையானக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக” பெண்கள் ஆண்களின் துணையின்றி வெளியே செல்வதற்கும், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்காவுக்குச் செல்வதற்கும், உயர் கல்வி கற்பதற்கும், விளம்பரங்களில் நடிப்பதற்கும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கும் தலிப்பான் அரசு தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.