கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு 16 மில்லியன் ரைஸ் அதாவது 3.33 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு பிரேசிலில் தனது கடற்கரை மாளிகையை கட்டும் போது சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நன்னீர் ஆதாரங்களின் பயன்பாடு மற்றும் இயக்கம் தொடர்பான விதிகளை மீறியமை பாறை மற்றும் மணல் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்பான விதிகளை மீறியதாக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நெய்மரின் ஊடக பேச்சாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.