2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.
ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்தில் இலங்கையின் மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 45.1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மே மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் 131.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூன் மாதத்தில் 100,388 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 648,775 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.