பிரபல பல்பொருள் அங்காடி மீது மர்ம நபர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயேநேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று விற்பனை நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
இத்தாக்குதலில் 9 பேர்உயிரிழந்துள்ளனர் எனவும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன் விரோதம் காரணமாகவே இத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.





















