இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் இற்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளான Bastille Day எனும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில் புதுடெல்லியில் இருந்து இன்று பயணித்துள்ளார்.
குறித்த பயணத்தில் பாதுகாப்பு; மூலோபாய ஒப்பந்தங்கள்; ரஷ்யா – உக்ரேன் போர் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் பிரமர் Emmanuel Macron கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்திய கடற்படையின் தேவைக்காகத் தயாரிக்கப்பட்ட 26 ரஃபேல் எனும் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் முகமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை 2009ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதன் பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.