ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர மின்விளக்கு அலங்கரிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக மாவட்ட செயலாளரின் தலைமையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக திடயவடனே நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.
ஸ்ரீ தலதா மாளிகை, கண்டி நகரசபை பிரதேச செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட உரிய சகல நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இந்த கலந்துரையாடல் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில், இடம்பெறவுள்ளதாக தியவடன நிலமே குறிப்பிட்டார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா அடுத்த மாதம் 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தலதா மாளிகை உள்ளிட்ட நான்கு மதஸ்தலங்களுக்கும் பெரஹெரா செல்லும் அனைத்து வீதிகளுக்குமான மின் விளக்கு அலங்காரத்துக்கான மின்சார செலவு ஒரு கோடியே 32 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பாய்வு அண்மையில் மின்சார சபையினால் தியவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமேக்களுக்கு கடிதம் மூலம் இலங்கை மின்சார சபை தெரியப்படுத்தியுள்ளது.
இதேவேளை, அரச அனுசரனையுடன் இடம்பெறும் எசல பெரஹெரா வரலாற்றில் முதல் முறையாக கட்டணம் அறவிடுமாறு கோரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.