கொழும்பு – லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், காலை 8 மணிமுதல், 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வைத்தியசாலையில் உள்ள பெண் வைத்திய நிபுணர் ஒருவரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது.
ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின், வெளிநோயாளர் பிரிவின் பணிகள் செயலிழக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும். இதன்படி, காய்ச்சல் மற்றும் தடிமன் என்பனவற்றுக்கு சிகிச்சை வழங்கப்பட மாட்டாது.
எனவே, வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வர வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.