பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வசதிகள் தற்போதும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வறுமையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் வலியுறுத்தினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என அழைக்கப்படும் மலையக உழைக்கும் சமூகம் நாட்டிற்கு அன்னிய செலாவணியை கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியுள்ள போதிலும், அவர்களுக்கான வசதி குறைந்த நிலையிலேயே இருக்கின்றது.
முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை, இதனால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றார்கள்.
மேலும், அவர்களுக்கான சுகாதார வசதிகள் குறைவாக காணப்படுகின்றன. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், வறுமையிலிருந்து விடுபடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களை அந்தப் பெயரால் அழைப்பதை விட மலையக உழைக்கும் சமூகம் என்று அழைப்பதே சிறந்தது.
https://www.facebook.com/Athavannews/videos/2406649102843190