இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் (Right To Information) பயன்படுத்துவது குறித்த, ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இன்று(புதன் கிழமை) வெள்ளவத்தையில் உள்ள ஆதவன் நிறுவனத்தில் இடம்பெற்றது.
இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான செயற்திட்டத்தின் சட்ட ஆய்வாளர் சலனி பெர்ணான்டோ, செயற்திட்ட உதவியாளர்களான ஆர்த்தி இரவிவர்மன் மற்றும் டினி ஜயசேகர ஆகியோரால் குறித்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் ஆதவனின் அலைவரிசைப்பிரதானி லோகேஸ்வரா கணேஷ் மற்றும் செய்திப்பிரிவினர் கலந்து கொண்டிருந்தனர்.