பங்களாதேஷில் எதிர்வரும் ஜனவரி மாதம் பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அந்நாட்டு பிரதமரான ஷேக் ஹசீனாவைப் பதவி விலகுமாறு கோரி எதிர்க் கட்சியினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறையில் எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.