உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார்.
அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டரின் தலைமை செயற்பாட்டு அதிகாரியான லிண்டா ”டுவிட்டரை வாங்கியது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே எனத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எலோன் மஸ்க் நேற்றைய தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ” டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படுகின்றது. விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம். நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்கின் குறித்த பதிவானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலோன் மஸ்க் எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாகக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.