அனைத்துக் கட்சிகளும் இணைந்துகொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மாற்றப்படும் என அக்கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபிவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கட்சி மாநாட்டை கூட்டி இந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் இதன் போது இந்த புதிய மாற்றம் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கலவான தொகுதிக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்