அனைத்து நாகா தாய்மார்கள் மற்றும் பெண்களை நினைவுகூரும் வகையில், மத்திய அரசாங்கத்தின் தபால் திணைக்களம் நாகா பின் கூடை அடங்கிய விசேட அட்டையை வெளியிட்டது.
மூங்கில் மற்றும் கரும்பு கூடை நாகாலாந்தின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், இது நாகா பெண்கள் விறகு, அரிசி அல்லது காய்கறிகளை எடுத்துச் செல்லப் பயன்படுகிறது.
அத்தோடு இந்த கூடை பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு அவளுடைய பெற்றோரால் அன்பிற்கும் பாசத்திற்கும் அடையாளமாக பரிசளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோஹிமாவில் உள்ள ராஜ்பவனில் நாகை பின் கூடையின் சிறப்பு அட்டையை நாகாலாந்து ஆளுநர் லா கணேசன் வெளியிட்டார்.
இந்த மூங்கில் கைவினை நாகா பெண்களின் கைவேலை, பொறுப்பு மற்றும் பாசத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாகாலாந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ள போதும் மாறிவரும் காலப்போக்கில், இளைய தலைமுறையினர் அதனுடனான தொடர்பை இழந்து வருவதக்கவும் கூறியுள்ளார்.
இருப்பினும் பழைய தலைமுறையினர் இந்த அழிந்து வரும் கலாச்சார நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்து நாகா சிவில் சமூகங்கள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.