கொழும்பு தாமரை கோபுரம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது முதல் இன்று வரை அதனை பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தைப் பார்வையிட்ட ஒரு மில்லியன் மக்களில் சுமார் 22,000 வெளிநாட்டவரகள்; உள்ளடங்குகின்றனர்.
ஏற்கனவே, கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் , தற்போது இரவு 10 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும். வார இறுதி நாட்களில், பொதுமக்கள் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தில் இருக்க முடியும் என நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
தாமரை கோபுரத்தை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சொத்துக்களை சேதப்படுத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் சட்டிக்காட்டியள்ளது.