உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆபிரிக்க தலைவர்களின் முன்மொழிவு அடிப்படையாக இருக்கலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ஆபிரிக்காவின் தலைவர்களைச் சந்தித்து, ரஷ்யாவைத் தங்கள் திட்டத்துடன் முன்னோக்கி நகர்த்துவதற்கான அவர்களின் அழைப்புகளைக் கேட்டபின், அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் போர்நிறுத்தம் போன்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்கள் உள்ளதாகவும் உக்ரைன் தொடர்ந்தும் மூலோபாயத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவு மோதலை கட்டுப்படுத்த சாத்தியமான நடவடிக்கைகளை கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்குதல், பெலரஸில் இருந்து அணு ஆயுதங்களை அகற்றுதல், புடினுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.