காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையானதும், சிலாபம் முதல் மன்னார் மற்றும் கங்கேஸன்துறை ஊடாக திருகோணமலை கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு, 65 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது