ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நியூஸ் ரேடியோவிற்கு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி மாநாட்டிற்கு முன்னர் 80 தேர்தல் கிளைகளை மறுசீரமைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று குழுவிற்கு அறிவித்துள்ளார்.
135 தேர்தல் கிளைகளின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நாளை கூடும் போது பல தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்களுக்கு கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக தொகுதி மட்டத்தில் கூட்டங்களை நடத்துவதையும் ஆரம்பித்துள்ளது.