அடுத்த பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில் நவாஸ் ஷெரீப்பே முதல்வராக பதவி ஏற்பார் என பாகிஸ்தானிய பிரதமரும் அவரது இளைய சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று முறை பாகிஸ்தானின் பிரதமராக செயல்பட்ட நவாஸ் ஷெரீப் 2019ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்.
எதிர்வரும் சில வாரங்களில் அவர் தாயகம் திரும்புவார் என தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.