அமெரிக்கா தலைவர்களுக்கும் தாலிபான் தலைவர்களுக்கும் இடையில் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ சந்திப்பொன்று கட்டாரில் இடம்பெற்றுள்ளது.
பொருளாதார மற்றும் பயணத் தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி சொத்துக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் தூதுக்குழுவினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் பின்னர் தாலிபான் அதிகாரிகள் மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறும் சந்திப்பு இதுவே முதல் முறையென அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.