யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வட மேற்கு முருகன் கோயிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அறிவகம் சன சமூக நிலையத்தின் தலைவர் தங்கராசா அரவிந்தன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவர் குழு குருதியைப் பெற்றுக்கொண்டனர்.
இதில் அறிவகம் சன சமூக நிர்வாகத்தினர், கிராம மக்கள், மற்றும் அயல் கிராம மக்கள் ஆர்வத்துடன் குருதிக் கொடை அளிப்பதை அவதானிக்க முடிகின்றது.


















