லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக சரித் அசலங்க 56 ஓட்டங்களையும் ஹிரிதோய் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில் பினுர பெனார்டோ 2விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா, நூர் அஹமட் தஹானி, ஹெய்டன் கெர்ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குக களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணி, 16.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தம்புள்ளை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அவிஷ்க பெனார்டோ 52 ஓட்டங்களையும் குசல் பெரேரா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், வியாஸ்காந்த் மற்றும் வெல்லாலேகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அவிஷ்க பெனார்டோ தெரிவுசெய்யப்பட்டார்.