எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய சூப்பர் மூன் எனப்படும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற போகிறது. நிகழ்வில் வழக்கமான முழு அளவை விட நிலவு சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும். நிலவோ அல்லது ஒரு செயற்கைகோளோ அதனுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகின்றபோது அது பெரிஜி என அழைக்கப்படும். அவ்வாறு நிலவு வரும்போது அதன் அளவு பெரியதாகவும், அதிக ஒளியுடன் பிரகாசமாகவும் தெரியும்.
இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும். அதனால் பூமியின் மீது அதிக ஒளி வீசப்படும். வானியலில் பெரிஜி-சிஜிஜி ((perigee-syzygy) என இந்த நிகழ்வு அழைக்கப்பட்டாலும், பார்க்க மிக அழகாக வசீகரிக்கும் விதத்தில் நிலவு தென்படுவதால், இது வழக்கத்தில் ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது.