மேகாலயா அரசு மற்றும் மேகாலயா மேலாண்மை நிறுவனம் ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1.3 தொன் அன்னாசிப்பழங்களின் ஏற்றமதிச் சந்தை இணைப்புகளை எளிதாக்கியுள்ளன.
இது மாநில விவசாயிகளுக்கும் இலாபகரமான சர்வதேச சந்தைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒருபகுதியாகும்.
மேகாலயாவிலிருந்து அன்னாசிப்பழங்கள் துபாய், குவைத் மற்றும் ஷார்ஜாவில் உள்ள வர்த்தக வளாகங்களில் விற்கப்படுகின்றன, இதனால் விலைகளில் ஏற்பட்ட இருமடங்கு உயர்வால் உள்ளுர் விவசாயிகள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவித்து வருகின்றனர்.
அத்துடன், உள்நாட்டு செயலிகள் சில்லறை விற்பனையாளர்களுடன் நீடித்த சந்தை தொடர்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் கடந்த ஆண்டு, 40 தொன் அன்னாசிப்பழங்கள், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, கர்நாடகாவைச் சேர்ந்த செயலிக்கு அனுப்பப்பட்டமையும் விசேடமாகும்.
மேகாலயா அன்னாசிப்பழங்கள் அதிக சர்க்கரை உள்ளடக்கம் (மற்றும் குறைந்த புளிப்புத்தன்மைக்கு பிரபலமானது. மாநிலத்தில் அன்னாசிப்பழங்கள் பெரும்பாலும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் பயிரிடப்படுகின்றன, இதன் விளைவாக பழங்களில் கனரக உலோகம் மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கணிசமாகக் குறைக்கப்படுகின்றன.
இந்த குணாதிசயங்கள் அவர்களை இலாபகரமான சர்வதேச மற்றும் தேசிய சந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உருவாக்கியுள்ளது. நீண்ட காலமாக, வியாபாரத்தில் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அரசாங்கம் தற்போது அதற்கான மாற்றுவழிகளை கண்டறிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.