திபெத்தில் தனது பிற்போக்குக் கொள்கைகளால் சர்வதேச அளவில் அடிக்கடி விவாதங்களைத் தூண்டி வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திபெத்திய மக்களின் கலாசாரத்தை ஒடுக்கத் தொடங்கியுள்ளது.
‘திபெத்தின் சைனிசேஷன்’ என்று அழைக்கப்படும், சீன அதிகாரிகள் திபெத்திய கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களை சீன அடையாளத்தை ஏற்றுக்கொள்வதற்கு அடிக்கடி தீவிரமாக முயன்று வருகின்றனர்.
சீனக் கலாசாரத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு சீனரல்லாத சமூகங்கள் கட்டாயப்படுத்தப்படும் அடக்குமுறைக் கொள்கை ஒன்றும் புதிதல்ல, திபெத்தை 1951இல் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியதிலிருந்து, திபெத்திய கலாசாரத்தை அப்பகுதியிலிருந்து சீர்குலைக்க சீனா பல்வேறு உத்திகளை கையாண்டுள்ளது.
சீனக் கம்னியூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாக தலாய் லாமாவின் வாரிசை அறிவிக்க முயற்சித்து வருகிறது, ஆனால் அதைச் செய்வதிலும் வெற்றிபெறவில்லை. 14ஆவது தலாய் லாமாவின் வாரிசுத் திட்டங்கள், திபெத்தியப் பகுதியை சீனாவுடன் ஒருங்கிணைக்கும் சீனாவின் அணுகுமுறையின் ஒருங்கிணைந்த அம்சமாகும்.
ஆயினும்கூட, சமீப காலங்களில், ஒரு வாரிசை தனது வழிகாட்டுதல்கள் மூலமாகவோ அல்லது பௌத்த மதத்தின் பிரசங்கங்களின் மூலமாகவோ வெளிப்படுத்த முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு, திபெத்திய ஆராய்ச்சியாளர் மீட்டெடுத்த இரண்டு முக்கிய ஆவணங்கள், அடுத்த தலாய் லாமாவின் மறுபிறப்பைக் கட்டுப்படுத்த சீனக் கம்னியூனிஸ்ட் கட்சியின் விரிவான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளன.
சர்வதேச திபெத் வலையமைப்பு மற்றும் திபெத் நீதி மையத்தால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் சீனாவின் திட்டங்கள் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சீனா, தனது முதலீடுகள் மற்றும், சர்வதேச பௌத்த சமூகங்களைச் அணுகுதல், பௌத்த தலங்களைப் புனரமைத்தல்;, பௌத்த தொடர்புகளுடன் நினைவுச்சின்னங்களை நிர்மாணித்தல் உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
இலங்கையும் ஏனைய தென்கிழக்காசிய நாடுகளும் இதற்கு முக்கிய உதாரணங்களாகும். பெரும்பான்மையான பௌத்த மக்கள்தொகை கொண்ட தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிராந்தியங்களை சீனா, பல டிரில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியில் இணைத்துள்ளது.
அதேநேரம், சீன அரசாங்கம், தனது பாரிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, ஹான் மக்கள் திபெத்தில் குடியேறுவதை ஊக்குவித்துள்ளது, இது திபெத்தில் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் இன அமைப்புகளை தீவிரமாக மாற்றியது.
கல்வி மற்றும் உத்தியோகபூர்வ சொற்பொழிவுகளில் திபெத்திய மொழிக்கு மேல் மாண்டரின் சீன மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை செயல்படுத்துவதும் சீனாவின் பிறிதொரு உத்தியாகும். அந்நிலைமையானது எதிர்கால தலைமுறையினரின் கலாசாரத்தை தம்முடன் இணைப்பதற்கான திட்டமாகும்.
இத்தகைய கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் சீனா அப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி உட்பட ஒட்டுமொத்த முன்னேற்றத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
மேலும் சீனக் கம்னியூனிஸ்ட் கட்சியானது திபத்தில் மனித உரிமை மீறல்களுக்கான முயற்சிகளையும் எடுத்துள்ளமையானது உலகளாவிய ரீதியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.