செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ. 611 கோடி முதலீட்டில், 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய பூங்கா இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பூங்காவில் இந்தியாவின் முதல் ‘தஞ்சோரா’ ரோலர் கோஸ்டர் மற்றும் இந்தியாவின் மிக உயரமான ‘ஸ்பின் மில்’ உட்பட 43க்கும் மேற்பட்ட சவாரிகள் உள்ளன.
டிக்கெட் விலை ரூ. 1,489 இல் இருந்து தொடங்குவதுடன், ஆன்லைன் முன்பதிவு மற்றும் கல்லூரி மாணவர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.














