• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/01
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, இஸ்ரேல், ஈரான், உலகம், சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 48 மணிநேரங்களாக மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போர்க்களமாக மாறியுள்ளது.

நேற்று காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துலா அலிகமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ நிலைகள் மீது நடத்திய ‘ரோரிங் லயன்’ (Roaring Lion) வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது இரு நாடுகளும் நேரடியாக ஏவுகணைப் போரில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஈரானின் தெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் நடன்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைத்துத்து தாக்கியுள்ளது.

இதில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஈரான் இதற்கு பதிலடி கொடுத்துவருகிறது.

ஈரான் தனது ‘புரட்சிகர காவல்படை’ (IRGC) மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைக் குறிவைத்து ‘ஃபத்தா’ வகை அதிவேக ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ (Iron Dome) மற்றும் ‘ஆரோ’ (Arrow) பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்தாலும், சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கியுள்ளன.

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலை பார்க்கும்போது இந்த மோதல் திடீரென ஏற்பட்டதல்ல எனவும் இதன் பின்னணியில் நீண்டகாலப் பதற்றம் உள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டதாக ஐநா ஆய்வாளர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாதது போருக்கு நேரடித் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

சரி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்தானே மோதல் இதில் இடையில் அமெரிக்கா எங்கிருந்து வந்தது?

ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவுக்கு ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதும் தற்போது அங்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தையும் பிடிக்கவில்லை எனவே ஈரானின் இந்த அரசாங்கத்தை ஒழிக்கவேண்டும் எனவும் அணு ஆயுத உற்பத்தியை தடுக்கவேண்டும் எனவும் அமெரிக்கா திட்டமிட்டது.

தற்போது இஸ்ரேலுக்கு உதவுவது போன்று அமெரிக்கா சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.

இதற்காகவே ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்கா இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளது.

தற்போது மத்திய கிழக்கில் போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகளும் நாம் உட்பட பெரும் அச்சத்தில் இருக்கின்றன.

காரணம் மத்தியகிழக்கில் போர் ஏற்பட்டாலும் அது அங்கு மட்டுமல்லாது உலகளவில் உள்ள சிறிய நாடுகளையும் பாதிக்கக்கூடும்.

போர்ச் சூழலால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது.

இதனால் பெற்றோல் உள்ளிட்ட பெரிபொருட்களுக்கு உலக நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் .

ஈரான், இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் தமது வான்பரப்புகளை முழுமையாக மூடியுள்ளன.

இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் விமானங்கள் அவசரமாக தரையிறங்கக்கூடிய வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா இரு தரப்பையும் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஈரானில் உள்ள சுமார் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ போன்ற ஒரு மீட்புப் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

இலங்கையும் மத்தியகிழக்கில் இருக்கும் இலங்கை மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் ஐநா பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடிய போதிலும், அமெரிக்காவின் வீட்டோ (Veto) அதிகாரத்தால் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

எனினும், ஈரான் தனது ‘அச்சு எதிர்ப்பு’ (Axis of Resistance) அமைப்புகளான ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களை முழுமையாகப் போரில் ஈடுபடுத்தினால், இது ஒரு உலகப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் இனி என்ன நாடாகும் என்பதை , அதுவரை போர் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ஆதவனின் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

Related

Tags: IranIsrealUSAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

Next Post

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

Related Posts

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கை

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

2026-03-01
ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!
கிரிக்கெட்

ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

2026-03-01
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்
அமொிக்கா

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

2026-03-01
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
உலகம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

2026-03-01
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!
இந்தியா

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

2026-03-01
Next Post
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

0
மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

0
ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

0
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.