மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள தூதரகம், உத்தியோகப்பூர்வ தகவல் மூலங்களை மட்டுமே நம்புமாறும் சவுதி அரேபிய அதிகாரிகள், ரியாதிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சுரல் அலுவலகம் ஆகியன வழங்கும் வழிகாட்டல்கள் ஆகியவற்றை அவசியம் பின்பற்றுமாறும் அறிவித்துள்ளது.













