16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை இரத்து செய்யக் கோரி அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது பதின்ம வயது நபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் மற்றும் மின் பாதுகாப்பு ஆணையர் ஜூலி இன்மான் கிராண்ட் ஆகியோருக்கு எதிரான மேல் நீதிமன்ற வழக்கில் 15 வயதான நோவா ஜோன்ஸ் பரதிவாயதியாக உள்ளார்.
டிசம்பர் 10 முதல் அமுலுக்கு வரவிருக்கும் இந்த சட்டம் மெட்டா, இன்ஸ்டாகிராம், டிக்டோக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் 16 வயதுக்கு உட்பட்டவர்களை அணுகுவதை தடுக்கும்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த சட்டம், இளைஞர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களை ஆபத்தான நடத்தைக்குத் தள்ளும் என்று நோவா ஜோன் தனது வழக்கில் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த வழக்கு விசாரணைக்கான திகதி இன்னும் திட்டமிடப்படவில்லை.














