மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி, இன்று தம்புள்ளையிலிருந்து நாலந்தாவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக்கப்படுகிறது.
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் வேர்களை மீட்டு உரிமை வென்றிட என்ற தொனிப்பொருளில், மலையக எழுச்சிப் பயணம் மன்னாரில் ஆரம்பமானது.
இந்த நடைபயணத்தில் இதுவரை பலரும் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்து வருவதோடு, இதற்கு ஆதரவினை வெளியிடும் வகையில் பல பிரதேசங்களில் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
16 நாட்கள் தொடர்ச்சியாக இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இறுதி நாளான நாளைய தினம் நாலாந்தாவில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.