மக்களின் நாடித்துடிப்பு என வர்ணிக்கப்படும் ‘சமபோஷா’ சிகரம் தொடும் சீறார்கள் எனும் தொனிப்பொருளில் பல நலத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
இதற்கமைய பாடசாலை மட்ட மாகாண விளையாட்டுப் போட்டிகளை இம்முறை மிக வெகுவிமர்சையாக சி.பி.எல். நிறுவனம் நடத்தவுள்ளது.
வட மத்திய, வட மேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
பல ஆண்டுகளாக அமோக வரவேற்பை பெற்றுவரும் சி.பி.எல். நிறுவனத்தின் நிகழ்வுகளில் அண்மையில் நடைபெற்றுமுடிந்த 14வயதுக்குட்பட்ட கால்பந்து சம்பியன்ஷிப் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
மாணவர்களுக்கான முதன்மையான தொடர்களை நடத்தி அதில் வெற்றி கண்டுள்ள சி.பி.எல். நிறுவனத்தின் இந்த முயற்சி, சக்திவாய்ந்த வீரர்களை உருவாக்குவதேயாகும்.
எதிர்வரும் ஆண்டுகளில் மாகாணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் சக்திவாய்ந்த வீரர்களை கண்டறிய உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு முதல் அதாவது கடந்த எட்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விளையாட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.