இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று ஆரம்பமானது.
20 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெறவுள்ளது. அத்துடன் வருடாந்த திருவிழாவின் தீர்த்தோற்சவம் 30ஆம் திகதி மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.