பழைய சட்டங்களுக்கு மாற்றாக ஹிந்தி பெயருடன் 3 குற்றவியல் சட்ட சட்டமூலங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய 3 சட்டமூலங்களை அறிமுகப்படுத்தினார்.
இவற்றில் தேசத்துரோக சட்டத்தை இரத்து செய்யும் வழிகளும் சிறு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சேவையில் ஈடுபடச் செய்யவும் விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிரிவினைவாத செயல்கள், ஆயுத கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களும் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை, கும்பல் வன்முறைகளால் படுகொலை நிகழும் பட்சத்தில் ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.