ஹவாயில் காட்டுத்தீயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள அதேநேரம் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்ட 1,418 பேர் அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்தவாரம் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது.
இந்நிலையில் சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள அதேவேளை மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் முற்றாக அழிவடைந்துபோன லகையினா பிரதேச மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.