லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 17ஆவது லீக் போட்டியில், காலி டைடன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், காலி டைடன்ஸ் அணியும் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கசுன் ராஜித 4 விக்கெட்டுகளையும் டப்ரைஸ் சம்சி மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 90 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய காலி டைடன்ஸ் அணி, 13.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளையும் மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், காலி டைடன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டமாக டிம் செய்பர்ட் 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், மகேஷ் தீக்ஷன, சொயிப் மாலிக் மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினை விழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சு சார்பில் 4 விக்கெட்டுகளை சாய்த்த கசுன் ராஜித தெரிவுசெய்யப்பட்டார்.