லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 17ஆவது லீக் போட்டியில், காலி டைடன்ஸ் அணிக்கு லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 90 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கசுன் ராஜித 4 விக்கெட்டுகளையும் டப்ரைஸ் சம்சி மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 90 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்னமும் சில நிமிடங்களில் களமிறங்கவுள்ளது.