லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 18ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் பி-லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிஸங்க 51 ஓட்டங்களையும் நிபுன் தனஞ்சய 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில், மத்தியூஸ், இசுரு உதான மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பி-லவ் கண்டி அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களையும் அசிப் அலி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில், மதிஷ பத்திரன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா, இப்தீகார் அஹமட், சமிக்க கருணாரத்ன விக்கெட்டினையும் வீழ்த்தினர்.