வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ள சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது தீவிபத்து ஏற்பட்ட வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால், சுற்றியுள்ள 9 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்களும், கதவுகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விபத்தில் சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













