சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் மாதம் 11 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த முக்கியமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த காலப்பகுதியில் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் நிதி அமைச்சின் தலைமையில் நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள நிபந்தனைகளில் ஏறக்குறைய 80 விகிதமானவை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.