அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதான செயல்முறை இன்று தொடங்கும் என நலன்புரிச்சபை அறிவித்துள்ளது.
ஆட்சேபனைகள் மீதான விசாரணையைத் தொடங்குவதற்குத் தேவையான உத்தரவுகளை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மொத்தம் 217,000 ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஆட்சேபனைகள் நுணுக்கமாக மதிப்பாய்வு செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்குள் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அஸ்வெசும தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 800,000 மேல்முறையீடுகளின் மறுஆய்வு வரை தேர்வு முறை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட சுமார் 1.5 மில்லியன் பயனாளிகளுக்கு அடுத்த வாரத்தில் முதல் தவணை பணம் வழங்கப்படும் என நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, வங்கிகள் ஊடாக நன்மைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அகில இலங்கை சமுர்த்தி வங்கி எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.