வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று (13) ஏலத்தில் 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் விசேஷ நாட்களில் நடக்கும் பூஜைக்கு பின், பூஜைக்கு வழங்கப்படும் பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏலத்தில் விற்க்கப்படும். எனினும் , அதிக விலைக்கு மாம்பழம் ஒன்று விற்பனையானது இதுவே முதல் முறை ஆகும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இப்படி ஏலத்தில் வாங்கும் பழங்களை வாங்குபவர்கள் அதனை சாப்பிடாமல், வெள்ளைத் துணியில் சுற்றி வீட்டில் கட்டித் தொங்கவிடுகின்றனர். இதனால் வீட்டில் கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
விடுமுறையை கழிப்பதற்காக லண்டனில் இருந்து வவுனியா வந்துள்ள கோவிலை அண்மித்த வீடொன்றில் வசிக்கும் ஒருவர் இந்த மாம்பழத்தை கொள்வனவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.