நாட்டில் நிலவும் வறட்சியினால் 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கம்பஹா, மாத்தளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் 54,984 குடும்பங்கள் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் ஜூன் மாதத்திலிருந்து சங்கானைப் பகுதியே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழையைப் பெறவில்லை, எல் நினோ விளைவு காரணமாக இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஓக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.