நியூசிலாந்துக்கு எதிராக செப்டம்பரில் நடக்கவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார்.
இது இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக அவர் அணிக்கு திரும்புவதை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் 50 ஓவர் உலகக் கிண்ண வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு 15 வீரர்கள் கொண்ட அணியில் இடமில்லை.
இதேநேரம் 19 வயதான லெக்-ஸ்பின்னர் ரெஹான் அகமட், நியூசிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட T20ஐ தொடருக்காக அணியில் இடம்பிடித்தாலும் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.
ஒருநாள் அணியில், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜொனி பேர்ஸ்டோ, சாம் கர்ரன் , லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர்.
T20 அணியில் ஜோஸ் பட்லர், ரெஹான் அகமட், மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜொனி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோஷ் டங்கு, ஜோன் டர்னர், லூக் வூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.