உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.
தாக்குதலுக்காக வந்த இந்த ஆளில்லா விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதுடன், அதன் ஒரு பகுதி நகர மையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் சரிந்து சேதமடைந்தது.
இதேவேளை, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த F-16 போர் விமான விமானிகளுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக இந்த விமானிகளுக்கு பயிற்சி அளிக்க 11 நாடுகளின் கூட்டணி திட்டமிட்டிருந்தது.
ரஷ்யாவின் படையெடுப்பின் போது உக்ரைனை ஆதரிக்கும் நட்பு நாடுகளின் தலைவராக அமெரிக்கா செயல்படுகிறது, எனவே விமானிகளுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்காவின் ஒப்புதல் தேவைப்பட்டிருந்தது.