நாட்டில் மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியம் உள்ளதாக புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிச்சயமாக நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட சாத்தியம் உள்ளதுடன். வரிசை ஏற்படும் அபாயம் தற்பொழுது தலைதூக்க வழி கோருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளினூடாக கடன் வாங்குகின்றார்கள் தவிர கடன் கொடுப்பதாக இல்லை.
இந்த ஆட்சியாளர்கள் ஒரு கடனை அடைப்பதற்கு மேலும் பல கடன்களை பெறுகின்றார்கள்.
நாட்டினுடைய உற்பத்தி அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே கடன் தொகைகளை திரும்ப செலுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஏற்றவாறு அமையவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.