ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் இடம்பெறவுள்ளது.
அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கவினால் 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி நிறுவப்பட்டது.
1956ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60 வேட்பாளர்களில் 51 பேர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.