நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி நாடுகளைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு தொடர்பில் கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையாவிட்டால், பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசியக் கொள்கையொன்றை நாம் உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் பொறுப்பை புறக்கணித்த போது பின்னடைவையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டுள்ளார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.