செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக நியமிப்பதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்காக சுரேஸ் சாலே தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்திருந்தாகவும் அண்மையில் செனல் 4 வினால் காணொளியொன்று ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள செனல் 4 வின் காணொளியை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறான ஆதாரமற்ற, குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுந்துள்ள திட்டமிடப்படாத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு செனல் 4 பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.